களியக்காவிளை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் சாலையோர ஓடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்துள்ளார். களியக்காவிளை போலீசார் சடலத்தை கைப்பற்றி, சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆராய்ந்தனர். விசாரணையில் இறந்தவர் ஜார்கண்டு மாநிலம் சார்ந்த திலிப் டிரிக்கி (40) என்பது தெரிய வந்தது. இவர் களியக்காவிளை பகுதியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். போலீசார் உறவினர்களை வரவழைத்து சடலத்தை ஒப்படைத்தனர். அவர்கள் குழித்துறை மின் மயானத்தில் சடலத்தை எரித்து, சாம்பலை பெற்றுச் சென்றுள்ளனர்.