களியக்காவிளை: கோயில் சார்பில் நோட் புக்குகள் வழங்கல்

களியக்காவினை அருகே மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகில் மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் அறக்கட்டளை சார்பில் கடந்த 27 வருடங்களாக பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்கு பேக், குடை, நோட்புத்தக், எழுதுகோல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் கேரளா, தமிழக பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. ஆகவே ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்புத்தக் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கோயில் மேலாளர் சாந்திகுமார் முன்னிலை வகித்தார். மதுரை சுப்பிரமணியன் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்ந்த பதவியினை அடைய வேண்டும் என பேசினார். 2025-2026 கல்வியாண்டை முன்னிட்டு சுமார் ஆயிரம் மாணவர்களுக்கு நோட்புத்தகங்கள், குடைகள், பேக்குகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி