களியக்காவிளை, மேக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னீஷ் மகன் ஸ்டாலின் (25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்டாலின் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.