குழித்துறை பகுதியைச் சேர்ந்த பொன்மணி (47) என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த 8 நாய்களில் 3 நாய்கள் நேற்று திடீரென இறந்து கிடந்தன. இது குறித்து அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது உறவினர்களான சதீஷ்குமார் (26), ரவீந்திரன் (26), சுனில் குமார் (42), ராஜ புவனேஸ்வர் குமார் (66), ராஜா பிரகதீஸ்வரர் குமார் (49), ராஜா தினேஷ்வர குமார் ஆகியோர் நாய்களை கொன்று இருக்கலாம் என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.