இந்நிலையில் களியக்காவிளை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் களியக்காவிளையில் இன்று (22-ம் தேதி) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கோழி கழிவுகள் இருந்தது தெரிய வந்தது. இதனை கொண்டு வந்த திருவனந்தபுரம் பகுதியை சார்ந்த முகமதுவை கைது செய்து குழித்துறை சிறையில் அடைத்தனர். அவர் ஓட்டி வந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் களியக்காவிளை சோதனை சாவடியில் சப் - இன்ஸ்பெக்டர் ஆன்றோ கிவின் பணியில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வேகமாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார். அந்த டெம்போவில் மாட்டு இறச்சி, கொழுப்பு, எலும்புகள், மாட்டு இறச்சி கழிவுப் பொருட்கள் இருந்தது. டெம்போவை பறிமுதல் செய்தார். இதனை கொண்டு வந்த தென்காசி ராஜா நகர் பகுதியை சார்ந்த சுப்பையா (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.