கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகேஷின் மனைவி சரண்யாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை அவரது தாயார் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். இதற்கு பின் மனைவி வீட்டில் இல்லாததால் ராகேஷ் அதிக அளவில் மது குடித்ததாக தெரிகிறது. சம்பவ தினம் மதியம் ராகேஷ் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த சோபாவில் படுத்து தூங்கி இருக்கிறார். இந்த நிலையில் மாலையில் பார்த்தபோது ராகேஷ் அசைவின்றி கிடந்ததாக தெரிகிறது.
இதைக் கண்டு அவரது உறவினர்கள் ராகேஷை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதா கூறியுள்ளனர்.
இது குறித்து அவரது தாயார் சந்திரிகா (65) என்பவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் ராகேஷ் எப்படி இறந்தார்? என்பது உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.