கன்னியாகுமரி மாவட்டம் கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் குளச்சல் துறைமுகம் வழியாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் , ஆனால் அரபிக்கடலோரம் சூறை காற்று மற்றும் மழையின் காரணமாக மீன் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் குளச்சல் துறைமுகத்தில் குறைந்த அளவில் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் மீனின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.