இனயம் நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த ஏசுபாலன், மூன்று பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுக்கச் சென்றார். சங்கு எடுக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.