குமரி: பணி ஓய்வு பெறும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறவிருக்கும் 3 உதவி ஆய்வாளர்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 2 அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி கௌரவித்தார். காவல்துறையில் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி ஓய்வுபெறும் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், பணி ஓய்விற்குப் பின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்வுக்கான நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி