கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நான்கு படகுகளில் இரண்டு படகுகள் முற்றிலும் சேதமடைந்தன. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.