இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவம் இடம் சென்று கிறிஸ்டோ விபினை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று(செப்.28) இரவு நண்பர்கள் சிலருடன் ஒன்று சேர்ந்து மது அருந்தி உள்ளதாகவும், பின்னர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் பைக்கில் புறப்பட்டு சென்றதாகவும் தெரியவந்தது.
ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. பைக்கில் செல்லும்போது நண்பர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று (29-ம் தேதி) காலை ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.