கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 52 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ரமேஷ், இரவு தனது வீட்டின் மாடிக்குச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். மாடிப்படியில் இருந்து விழுந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.