இதில் மாணவி விசாகா சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மேலும் படுகாயம் அடைந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வலியால் துடித்து அலறினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு முதல்லுதவி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செல்லும் வழியில் விசாகா பரிதாபமாக உயிரிழந்தார். தாய் மற்றும் மகனுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கனிமவள லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.