பளுகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், கண்ணுமாமூடு தாமரோடு பகுதியைச் சேர்ந்த மனு (25) மற்றும் தேவிக்கோடு குறக்கோடு பகுதியைச் சேர்ந்த விஜி (28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிராம் கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.