குளச்சல் நகராட்சிப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 15.40 டன் பிளாஸ்டிக் கழிவுகள், திண்டுக்கல்லில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நகராட்சி உரக் கிடங்கில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளில் இருந்து, சிமென்ட் ஆலைக்குத் தேவையான பிளாஸ்டிக் கழிவுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த நிகழ்வில் குளச்சல் நகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.