குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பாலப்பள்ளியைச் சேர்ந்த தொழிலாளி விஜு (44) புதன்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. வியாழக்கிழமை அவரது சடலம் குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றிருந்த நிலையில், அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தக்கலை போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி