திருவட்டாறு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விஜய் வசந்த் எம்.பி. மகாத்மா காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பாதயாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது அவர், "பாஜக அரசை தூக்கி எறிவோம், 2029-ல் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்" என பேசினார்.