திருவட்டார்: ஆற்றில் மூழ்கி நரசிங் மாணவர் பலி

கேரள மாநிலம் திருவனந்தபுரம், விதுரா பகுதியைச் சேர்ந்தவர் சனில் மகன் நீரஜ் (20). இவர் குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

கல்லூரி விடுதியில் தங்கியிருந்தவர் நேற்று (ஜூன் 14) மாலை மாணவர்களான சில நண்பர்களுடன் சேர்ந்து பரளியாற்றில் குளிக்கச் சென்றனர். குளிக்கும் போது திடீரென நீரஜ் ஆற்றில் மூழ்கினார். உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குலசேகரம் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய நீரஜை சுமார் 2 மணி நேர தேடுதலுக்குப் பின் உடலை மீட்டனர். பின்னர் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி