திற்பரப்பு: தொழிலாளியை தாக்கிய டிரைவர் கைது

திற்பரப்பு அருகே சிறுகுளத்தங்கரை பகுதி சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (39) ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. செம்மண்கால விளையை சேர்ந்தவர் மகேஷ் (25). டிரைவரான இவர் சம்பவ தினம் அங்குள்ள லூக்காஸ் என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணைக்கு கோழி கழிவுகளை கொண்டு சென்றார். 

இதனை அறிந்து ஜஸ்டின் ராஜ் தடுத்துள்ளார். இதனால் மகேசுக்கும் ஜஸ்டின்ராஜுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த முன்னுரைவை மனதில் வைத்து சம்பவ தினம் மகேஷ், ஜஸ்டின் ராஜிடம் தகராறு செய்து சட்டையை பிடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜஸ்டின் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷை நேற்று (23-ம் தேதி) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி