தமிழக அரசு சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களின் பொருளாதாரநிலை மேம்பட கிராமபகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீலாவீல் மின்விசை சக்கரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மொத்தம் 286 விலையில்லா சீலாவீல் மண்டபாண்ட சக்கரங்கள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. என பேசினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மண்டபாண்டங்கள் தயாரிப்பதனை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (காதி) எபனேசர், நாகர்கோவில் உள்ளுர் திட்டக்குழும உறுப்பினர் மரியசிசுகுமார், மண்பாண்ட தயாரிப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.