தக்கலை, சரவிளை பகுதியைச் சேர்ந்த தாரிக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ஷைபா நிஷா (24) மற்றும் 2 வயது மகன் காணாமல் போயுள்ளனர். வீட்டில் இருந்த தாய், மகன் இருவரும் வெளியே சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில், இது குறித்து ஷைபா நிஷாவின் பெற்றோர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.