தக்கலை: மாணவி பாலியல் பலாத்காரம்; மாதர் சங்கம் கோரிக்கை

குமரி மாவட்ட அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று(டிச.31) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தக்கலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டு பாலியல் பலாத்காரம் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதே நேரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை தப்பிக்க விட்டதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் பலருக்கு தொடர்பு இருக்கலாம், உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளியை தப்பிக்க விட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி