இதையடுத்து சிறிது நேரத்தில் ரவிராஜின் வாயிலிருந்து நுரை தள்ளியது. இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த கோழிக்கடை உரிமையாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அழகியமண்டபம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரவிராஜின் மனைவி வளர்மதி அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 அதிரடியாக குறைந்தது