பளுகல்: இளம் பெண் மரணம்; போலீசார் விசாரணை

களியக்காவிளை அடுத்த பளுகல் போலீசரகத்திற்குட்பட்ட கண்ணுமாமூடு அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். இவரது மகள் அதுல்யா (31). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (அக்.,3) திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள்  அவரை பாறசாலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அதுல்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.   ஆனால் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா?   என பளு கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி