பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆய்வில் திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி