அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகன விபத்து நஷ்ட ஈடு கோரி பத்மநாபபுரம் துணை அமர்வு நீதிமன்றத்தில் எபநேசர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு துணை அமர்வு நீதிபதி மாரியப்பன் விபத்தில் படுகாயம் அடைந்த எபனேசர் தன்னுடைய இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதற்கு இன்று வரை தன்னுடைய மனைவியின் துணை இல்லாமல் செய்ய இயலாத காரணத்தாலும், அவர் நிரந்தர ஊனமுற்றவராகிய காரணத்தாலும் அவருக்கு காப்பீடு நிறுவனம் 67 லட்சத்தி 44 ஆயிரத்து 949 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க நேற்று உத்தரவு பிறப்பித்தார்.