நாளை (அக்.,4) தொடங்கி 13ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. நவராத்திரி விழாவை ஒட்டி குமரியில் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சாமி ஊர்வலமாக திருவனந்தபுரம் நவராத்திரி பவனிக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
தற்போது நவராத்திரியையொட்டி மக்கள் வீடுகளிலும் கோயில்களிலும் இன்று (அக்.,3) காலை முதல் கொலு வைத்து வழிபடுதல் தொடங்கியுள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வடிவீஸ்வரம், திருவட்டார் கோவில், மற்றும பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நவராத்திரி விழாவை தொடங்கி உள்ளனர்.