அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூரில் உள்ள ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டிப்பாலத்தை சுற்றி ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு செய்தார். செயற்பொறியாளர், நீர்வளத்துறை, மாவட்ட சுற்றுலா அலுவலர், திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அவர் அறிவுறுத்தினார்.