இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் பைக் திருடனைத் தேடிவந்தனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் திருடனைத் தேடிவந்தனர். இந்நிலையில் கேரள மாநிலம் ஒற்றாமரம் பகுதியில் அதே புல்லட் பைக்கில் ஒரு ஆசாமி சுற்றித்திரிவது தெரியவந்தது.
போலீசார் அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர். அப்போது அவர் தமிழகம் மற்றும் கேரளாவில் புல்லட் வாகனத்தை மட்டுமே குறிவைத்து திருடிய செல்சன் (20) என்பது தெரியவந்தது. கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த செல்சன் மீது கேரளா காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட புல்லட் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. திருடிய புல்லட்டுகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார்.