மார்த்தாண்டம்: மாமியார் மீது சுடுநீரை ஊற்றிய மருமகள்

மார்த்தாண்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி மரியா ஜோஸ் (67). இந்த தம்பதியரின் இரண்டாவது மகன் சந்தோஷ்குமார் மனைவி சைனிமோள் (35). உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக மரியா ஜோசுக்கும் சைனி மோளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவ தினம் வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சைனி மோள் சமையலறையில் சென்று அடுப்பில் வைத்திருந்த சூடு தண்ணீர் எடுத்து வந்து மாமியார் மரியா ஜோஸ் மீது கொட்டினார். இதில் மரியா ஜோஸ் உடல் வெந்து அலறி துடித்தார். மேலும் மாமியாரை முதுகில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியா ஜோஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி