மார்த்தாண்டம்: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சசி (50) மதுபோதையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மதியம் சாப்பிட அழைத்த மனைவி கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சசியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி