இதற்கு இடையே கணவன் மனைவி தங்களுக்கு விவாகரத்து கேட்டு நாகர்கோவில் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வழக்கு நிலுவையில் உள்ளது. நேற்று சசிகுமார் மற்றும் மனைவி ஜெயா ஆகியோர் வெளியில் சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ஆஷிகா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, போலீசார் ஆஷிகா உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களில் இறந்ததால் பத்மநாபபுரம் சப்கலெக்டர் விசாரணையை தொடங்கி உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?