குழந்தையைப் பார்க்க கணவர் மற்றும் அவரது வீட்டினர் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபிதா குழந்தையுடன் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஜாக்குலின் சுபிதாவிடம் மேலும் ஒரு லட்சம் வரதட்சணை வேண்டும் என கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த ஜாக்குலின் சுபிதா குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குளச்சல் மகளிர் போலீசார் கணவர் ஆல்வின் அவரது தாய் டெய்சி (58) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.