பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்குடியின மக்கள் கல்வி வளர்ச்சி பெறும் வகையில் மணலோடையில் பழங்குடி நலஉண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியானது 01.05.1962-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளி 15.10.1993 அன்று நடுநிலைப்பள்ளியாக அங்கீகாரம் பெற்று, 08.02.2021 அன்று உயர்நிலைப்பள்ளியாக அங்கீகாரம் பெற்றது. இப்பள்ளி கடந்த 63 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது.
இந்த பள்ளி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஉண்டு உறைவிட மாணவர் விடுதியானது தமிழக அரசின் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023–24-இன் கீழ் ரூபாய் 42.55 இலட்சம் செலவில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் துணை ஆட்சியர் வினய்குமார் மீனா, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.