மலவிளை: அரசு தொடக்கப்பள்ளி  நூற்றாண்டு விழா

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் பழம் பெருமை வாய்ந்த மலவிளை அரசு தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று (ஏப்ரல் 12) பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பள்ளி வளாகத்தில் முன்னாள், இந்நாள் மாணவர்களும் பொதுமக்களும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு விழா தீபத்தை ஏற்றி வைத்து விழாப் பேரூரை ஆற்றி விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக வருகை தந்த விஜய் வசந்த்க்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

விழாவில் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவட்டார் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வினுட்ராய், மற்றும் தலைமை ஆசிரியை அமுதா, ஆசிரியர்கள், மாணவர்கள், நூற்றாண்டு விழாக்குழுவினர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி