அப்போது தந்தை அவரை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக ஆசிரியையிடம் கூறிவிட்டு மாணவி வீடு நோக்கி நடந்து சென்றுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பைசல் கான் (37) என்பவர் மாணவியை அழைத்து தனது வீட்டில் கொண்டு சென்று அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மாணவி அங்கிருந்து தப்பி சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் போக்சா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஃபைசல் கானை நேற்று (டிசம்பர் 28) கைது செய்தனர்.