இது தொடர்பான புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்படி போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாங்கோடு என்ற இடத்தில் கூண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, வாகன டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதை அடுத்து வாகனத்தை திறந்து பார்த்தபோது அதில் ஹோட்டல் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, அருமனை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.