மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஸ்டாலின் நலம் காக்கும் முகாமில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொண்டார். குமரி மாவட்டத்தில் இது 30வது மருத்துவ முகாம் என்றும், இதுவே கடைசி முகாம் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற 30 முகாம்களில் சுமார் 67 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் லியோ டேவிட் மற்றும் மருத்துவத் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.