குமரி: சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு

குமரி மாவட்டம் தோவாளை சாலையில் இன்று (பிப்ரவரி 22) காலை ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோர புதரில் இருந்து திடீரென ஒரு சாம்பார் மான் காரின் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் மான் உயிரிழந்தது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி அன்பழகன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மானின் உடலை மீட்டனர். பின்னர், தோவாளை கால்நடை மருத்துவ அதிகாரி மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி