குமரி: மருத்துவமனையில் மயங்கி விழுந்த வாலிபர் சாவு

கடியப்பட்டிணத்தைச் சேர்ந்த ஜோசப் வினிஸ்டன் (43) உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 21ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு அதே மருத்துவமனைக்குச் சென்றபோது மயங்கி விழுந்தார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி அமலா அனிஷா (38) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி