குமரி: ரயிலில் பயணியிடம் 1.400 கிலோ தங்கம் கொள்ளை

கேரளாவில் இருந்து சென்னைக்குச் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜோஸ் என்பவர் ₹8 கோடி மதிப்புள்ள சுமார் 1.400 கிலோ தங்கத்துடன் திருநெல்வேலிக்கு நகை செய்யச் சென்றுள்ளார். நேற்று காலை குழித்துறை ரயில் நிலையம் வந்தபோது, அவரது பையில் இருந்த தங்கம் மாயமானது. இது குறித்து குழித்துறை ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார், ஜோஸ் ரயிலில் ஏறிய இடம் முதல் தங்கம் காணாமல் போன இடம் வரை உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி