குமாரபுரம்: வீட்டில் இருந்த பெண் மாயம் - புகார்

குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (53) என்பவர், தனது மனைவி கிரேசி (48) காணாமல் போனதாக கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்க்கும் இவர்களது மகனிடம் செல்போன் வாங்கிவிட்டு, தவணை செலுத்தாத ஜஸ்டின் என்பவருடன் கிரேசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணவர் கண்டித்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி கிரேசி திடீரென வீட்டை விட்டு மாயமாகி, ஜஸ்டினுடன் வாழப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி