குலசேகரம்: மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது

குலசேகரம் பகுதியை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குலசேகரம் போலீசார் மாணவர்களுக்கு எங்கிருந்து குட்கா கிடைக்கிறது என ரகசியமாக விசாரணை நடத்தினர். 

இதில் குலசேகரம் அருகே நாகக்கோடு, அம்பலத்து விளைப் பகுதி சேர்ந்த மளிகை கடை நடத்திவரும் சந்திரசேகரன் (52) என்பவர் மூலம் மாணவர்களுக்கு குட்கா விற்கப்படுவது தெரிய வந்தது. இதை எடுத்து போலீசார் சந்திரசேகர் கடை மற்றும் வீட்டில் நேற்று (மார்ச் 26) அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது அவருடைய வீட்டில் 12 சாக்கு பைகளில் விற்பனைக்காக குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூபாய் 79 ஆயிரத்து 200 ஆகும். இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் சந்திரசேகரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி