சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்குள் வராமல் கொளுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதை அடுத்து குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீப்பிடித்தலில் டெப்போவில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள மரங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா அல்லது ஏதேனும் சதி வேலையா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்