குலசேகரம்: புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி பொதுக்கூட்டம்

குழித்துறை மறைமாவட்ட கிட்ஸ் இயக்கம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குலசேகரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறை மாவட்ட முதன்மை பணியாளர் மரியமார்ட்டின் தொடக்க உரையாற்றினார். கிட்ஸ் இயக்க செயல் இயக்குனர் மார்ட்டின், குலசேகரம் பங்கு பணியாளர் பிரீமஸ் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பேரணியின் இறுதியில் புற்றுநோய் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி