குலசேகரம்: பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி அரங்கேற்றம்

குலசேகரத்தினில் அருமனை சித்ரா நாட்டிய கலாலயம் சார்பில் 8வது அரங்கேற்ற விழா இன்று 30-ம் தேதி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் குச்சிப்புடி, பரதநாட்டியம் போன்ற கலைகளை அரங்கேற்றினர். பரதநாட்டிய குரு மினி கமலா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரங்கேற்றத்தை நிறைவு செய்தனர். திருவனந்தபுரம் சுவாதி திருநாள் இசை கல்லூரி பேராசிரியர் நந்தங்கோடு வினாயகசந்திரன் உட்பட கலை துறை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி