குளச்சல் பகுதியில் நேற்று மாலை ஒரு மிளா தப்பி வந்து தோட்டத்தில் நின்றது. பொதுமக்கள் தகவல் அளித்ததை அடுத்து, போலீசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவானதால் வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை. இன்று காலை அந்த மிளா மாயமானது. வனத்துறையினர் தொடர்ந்து அதைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.