கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்கு உட்பட்ட கட்டிமாங்கோடு உயா் அழுத்த மின்பாதையில் நாளை வியாழக்கிழமை, மே 21 அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கொல்லமாவடி, கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வா்த்தக நாடாா் குடியிருப்பு, பட்டன்விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.