குமரி மாவட்டம் கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட வழுக்கம்பாறை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தனர். அப்போது திடீரென காட்டில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை பேருந்து நிறுத்ததில் நின்றிருந்த மக்களை காட்டு யானை பின்தொடர்ந்து துரத்தியது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.