இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுனிதா திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதை அடுத்து பெஞ்சமின் அவசரமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சுனிதா மாயமானது குறித்து இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 28ஆம் தேதி பெஞ்சமின் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டது தெரிய வந்தது.
அந்த வீடியோவில் தனது மனைவி சுனிதா கள்ளக்காதலுடன் ஓடிவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் சுனிதாவின் உறவினர் ஒருவர் அவரை மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுனிதாவை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.